யாழ்.நீதிவான் நீதிமன்றில் பக்தருக்கு ஏற்பட்ட நிலை!
Monday, December 18th, 2017
யாழ்.நீதிவான் நீதிமன்ற வழக்கிற்கு ஐயப்ப விரதம் கடைப்பிடித்த ஒருவர் முன்னிலையாகிய போது அவருடைய ஆடைகள் தொடர்பில்கண்டித்த நீதிமன்றம் மன்றைவிட்டு வெளியேறுமாறு பணித்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற பொலிஸாரை அழைத்து இவ்வாறான நபர்களை நீதிமன்றுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மன்றுகட்டளையிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கறுப்பு நிற உடை அணிந்து வருவோர் மற்றும் ஐயப்ப சுவாமி விரதம் கடைப்பிடிப்போர்யாழ்.நீதிவான் நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் நீதிமன்றின் கட்டளைக்கு அமைய இந்த நடைமுறைபின்பற்றப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விரதம் கடைப்பிடிக்கும் போது கறுப்பு நிற ஆடைகளை அணிவதுடன், கறுப்பு நிற சால்வையை கழுத்தில் சுற்றி, கால்களில்செருப்பின்றி விரதத்தை பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாட்சிகளை பாதுகாப்பதற்குப் புதிய பிரிவு!
O/L முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் - பகிரங்க மன்னிப்பு கோரினார் நாமல் ராஜபக்ச!
|
|
|


