முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் – பகிரங்க மன்னிப்பு கோரினார் நாமல் ராஜபக்ச!

Sunday, October 2nd, 2022

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் என தெரிவித்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

திகாமடுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய தீர்மானித்தமை தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த முடிவுக்கு கட்சி என்ற முறையில் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியின் ஊடாக மீண்டும் போட்டியிடுவதற்கான தனது அர்ப்பணிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெறும் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் போன்ற சம்பவங்களைத் தடுப்பதுடன், நாட்டிற்குள் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உப...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 916 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமை...