இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உபகரணங்கள் இலங்கை வந்தடைந்தது!

Friday, April 17th, 2020

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சீனாவினால் இலங்கைக்கு வழஙங்கப்படவள்ள மருத்துவ உதவிப் பொருட்களில் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியுடைய மருத்துவ நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தடைந்துள்ளது.

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மருத்துவ நிவாரண பொருட்களில் ஒரு பகுதியே இன்றையதினம் ஷங்காய் நகரிலிருந்து சீனா ஈஸ்டன் விமான சேவையின் MU231 என்ற விமான மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.,

குறித்த மருத்துவ பொருட்களில் இருபதாயிரத்து பதினாறு கொரோனா வைரஸ் தொற்றினை பரிசோதிக்கும் PCR பரிசோதனை உபகரணங்கள், சுகாதாரத்துறையினர் பாவிக்கக் கூடிய 10 ஆயிரம் முகக்கவசங்கள் , சத்திர சிகிச்சையின் போது உபயோகிக்கக் கூடிய ஒரு இலட்சம் முகக் கவசங்கள், பாவித்த பின்னர் அப்புறப்படுத்தக் கூடிய 10 ஆயிரம் பாதுகாப்பு ஆடைகள் , சுகாதாரத்துறையினர் பயன்படுத்தும் 1000 கண் பாதுகாப்பு உபகரணம் மற்றும் ஒரு தடைவ மாத்திரம் பயன்படுத்தக் கூடிய சத்திர சிகிச்கையின் போது உபயோகிக்கும் 50 ஆயிரம் கையுறைகள் என்பன சீனாவிலிருந்து இன்று கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ நிவாரணப் பொருட்களின் மொத்த தொகை 6 இலட்சத்து 93 ஆயிரத்து 191 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த நெருக்கடியான சூழலில் இலங்கை அரசாங்கம், நாட்டு மக்கள் மற்றும் வைத்தியத்துறையினருக்கு மதிப்பளிப்பதுடன் , கொரோனா வைரஸ் ஒழிப்பினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் வாழ்த்தும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: