அக்கராயன் மகாவித்தியாலயத்தில் பௌதீகவியல் பாட ஆசிரியர் இல்லை!

Tuesday, October 10th, 2017

கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் பௌதீகவியல் பாட ஆசிரியரை நியமிக்குமாறு கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர்.இதனால் இருபது கிலோமிற்றர் தூரத்தில் உள்ள கிளிநொச்சி நகரத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக உயர்தர விஞ்ஞானப்பிரிவில் பௌதீகவியல் பாடத்திற்கான ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் வகுப்பறையில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.எனவே பெற்றோர்களாகிய எமது வேண்டுகோளை ஏற்று ஆசிரியரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என கல்விப் பணிப்பாளரிடம் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றாக அக்கராயன் மகாவித்தியாலயம் விளங்குகின்றது. 800 மாணவர்கள் இங்கு கற்று வருகின்றனர்.

இவ்வாறான ஒரு பாடசாலையில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts: