2017 இன் வரவு செலவுக்கு முன்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம்!

Saturday, August 27th, 2016

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது..

2017ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதில் அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இதன் காரணமாக புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் தந்திர நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை துரிதமாக தயாரித்து அது கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் நாட்டிற்குள் வாத விவாதங்கள் ஏற்படும் சூழலில், வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்தால், இது தொடர்பான வாத விவாதங்கள் பெரிதாக எடுபடாது என்ற காரணத்தினால், அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக பேசப்படுகிறது

Related posts: