யாழ் நகர வீதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்த நடவடிக்கை!

யாழ் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை,மற்றும் கோப்பாய் பிரதேச சபை களில் இருக்கின்ற வீதிப்போக்குவரத்து நடமுறையில் உள்ள முக்கியமான சந்திகளில் முதற்கட்டமாக 14 சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த அமர்வில் வீதிபோக்குவரத்து விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோதே இவ்வாறு அறிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலப்பகுதியில் யாழ். குடா நாட்டில் முக்கியமான சந்திகளில் வீதிப்போக்குவரத்து ஊடாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது இதனை கட்டுப்படுத்தும் முகமாக வீதிப்போக்குவரத்து பொலிஸாரின் பணிப்பின்பெயரில் குறித்த நடவடிகை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ் மாநகரசபை தெரிவித்துள்ளம குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண த்தில்மீன் மழை !
இயக்கச்சியில் குண்டு வெடிப்பு - ஒருவர் படுகாயம் - வெடிகுண்டு தயாரிப்பு முயற்சி என சந்தேம்!
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அதானிக்கு வழங்கப்படுவதான செய்தியில் உண்மையில்லை – அமைச்சர் நிமல் சி...
|
|