வடக்கில் 55,106 பரீட்சார்த்திகள் சாதாரண பரீட்சைக்கு தோற்றுகின்றனர் !

Tuesday, December 6th, 2016

இன்று ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 52,106 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான 77 இணைப்பு நிலையங்கள் செயற்படுகின்றன. அவற்றில் 450 பரீட்சை நிலைங்களும் செயற்படுகின்றன. 450 பரீட்சை நிலையங்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 27,527 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 24,579 பேரும் தோற்றுகின்றனர். யாழ்.குடாநாட்டில் 15,468 பாடசாலைப் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 12,686 மாணவர்கள் தோற்றுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் பாடசாலை பரீட்சார்த்திகளாக 3,619 மாணவர்களும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 4,097 மாணவர்களும் தொற்றுகின்றனர். மன்னார் மாவட்டததில் 2,243 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 3,363 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தொற்றுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 2,664பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 2,119 பேரும் தோற்றுகின்றனர். கிளிநொச்சி மாவட்டதில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3,526 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 2,314 பேரும் தோற்றுகின்றனர். நாடு முழுவதும் 7 லட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 5,669 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பர்Pட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன என்று பரீட்சார்த்திகள் உரிய ஆவணங்களுடன், உரிய நேரத்தில்; பரீ;ட்சை நிலையங்களுக்குச் செல்லவேண்டும் என்று பரீட்சைகன் ஆணையாளர் நாயகம் என்.ஜே புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-------------------------------------------------9

Related posts: