கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அதானிக்கு வழங்கப்படுவதான செய்தியில் உண்மையில்லை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, June 18th, 2022

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கப்படுவதாக வெளியிடப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என, துறைமுக, கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், கிழக்கு முனையத்தை, துறைமுக அதிகார சபையின் செலவில், அதற்கு உரித்தான முனையமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அவசியமான பளுதூக்கி நிலைத்தாங்கிகளுக்காக, 278 மில்லியன் டொலர் செலவாகும்.

அதில், தற்போது 18 மில்லியன் டொலர் துறைமுக அதிகார சபையினால், உரிய விலைமனுக் கோரலுக்கு அமைய, நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பளுதூக்கி நிலைத்தாங்கிகளை நிறுவுவதற்காக, ஒன்றைரை ஆண்டுகாலம் எடுக்கும்.

அதேநேரம், முதற்கட்ட கொடுப்பனவாக 39 மில்லியன் டொலர் அளவில் குறித்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. எனினும், தற்போதைய டொலர் நெருக்கடியால், அந்தக் கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், அது அதானி குழுமத்திற்கு கிழக்கு முனையத்தை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அல்ல என்று துறைமுக, கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: