வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை – தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!
Monday, May 24th, 2021
நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அனர்த நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
களனி கங்கை, நில்வலவை கங்கை, தெதுரு ஒய ,ஜின் கங்கை, ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலைக்கு அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் நிலையம் அறிவித்திருக்கிறது
இதேவேளை தற்போதைய நிலைமையில் அனர்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காக விமானப் படையினரும் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய விமானப்படையின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக ஒன்பது ஹெலிகொப்டரகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன…
Related posts:
வடக்கு – கிழக்குப் பெண்களை இலக்கு வைத்து மனித வியாபாரம்- அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ!
வர்த்தமானியை வெளியிடுங்கள் இல்லையேல் தேர்தலை நடத்தவது கடினம் - தேர்தல் ஆணைக்குவின் தலைவர் கோரிக்கை!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - அபார வெற்றியுடன் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது பாஜக!
|
|
|


