யாழ். செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பல பொருட்களைப் பெற முடியும்!
Monday, September 26th, 2016
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய உற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுப் பருத்தித்துறைப் பிரதேச செயலக உற்சவ காலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாரணங்கள், கைக்கடிகாரங்கள், அடையாள அட்டைகள், கைத்தொலைபேசிகள், கைப்பைகள், ஆபரணங்கள், சைக்கிள் திறப்புக்கள் ஆகிய பொருட்கள் இவ்வாறு தவறவிடப்பட்ட பொருட்களில் அடங்கியுள்ளன.
பருத்தித் துறைப் பிரதேச செயலகத்தில் அலுவலக நேரத்தில் குறித்த பொருட்களை அடையாளம் காட்டிப் பெற முடியும் என பருத்தித் துறைப் பிரதேச செயலர் ரி. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Related posts:
சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்!
மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவை வழங்குவதே எமது கடமை – ஜனாதிபதி உறுதி!
|
|
|


