யாழ். கொக்குவில் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில்  புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவச பயிற்சிப்  பரீட்சையும் கருத்தரங்கும்!

Thursday, August 4th, 2016

நல்லூர் பிரதேச சபையின் கொக்குவில் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பயிற்சிப்  பரீட்சை நேற்றுப் புதன்கிழமை(03)  ஆரம்பமாகியுள்ளது.  எதிர்வரும்-10 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக குறித்த பயிற்சிப் பரீட்சை இடம்பெறவுள்ளது.  காலை- 8.30 மணி முதல் மாலை -04.30 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில் மாணவர்கள் தமக்கு விரும்பிய நேரத்தில் வருகை தந்து பரீட்சை எழுத முடியுமென  நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

எமது பிரதேச சபைக்குட்பட்ட வதிவிடத்தைக் கொண்ட  மாணவர்களும், எமது பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும்  பங்குபற்ற முடியும். இந்தப் பயிற்சிப் பரீட்சைக்கான வினாத்தாள் யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றைச் சேர்ந்த பிரபல கல்லூரியின் ஆசிரியரொருவரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிப் பரீட்சைகள் நிறைவுக்கு வந்த பின்னர் எதிர்வரும்- 12 ஆம் திகதி பிற்பகல்-03 மணி முதல்-05 மணி வரை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தில் புலமைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் திருமதி- தி. அன்னலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் , இலவசமாக நடாத்தப்படவுள்ள  பயிற்சிப்  பரீட்சையும் கருத்தரங்கும் நிகழ்வில் மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறும் பிரதேச சபை மேலும் அறிவித்துள்ளது.

Related posts: