யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று – மாவட்டத்தின் பல்வேறு துறைசார் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, October 26th, 2023

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று -(26)வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ர்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்வி, சுகாதாரம், கால்நடை, விவசாயம், கமநல சேவைகள், போக்குவரத்து, காணி, நீர்வழங்கல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள், அரச திணைக்களத் தலைவர்களும் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு கட்டுப்பாடு - பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமர...
வடக்கில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்ய ஒசன்பிக் தனியார் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையா...
பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் வலியுறுத்து!