பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் வலியுறுத்து!

Wednesday, March 2nd, 2022

ரஷ்யா – உக்ரைன் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று (02) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு பிரதமர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய பெலாரஸிலுள்ள சுமார் ஆயிரத்து அறுநூறு மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் பெலாரஸிற்கு அருகிலுள்ள இலங்கை தூதரகமான மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடி சில வாரங்கள் கல்விப் பணிகளை தாமதிப்பது குறித்தும் அவர்களுக்கு ரஷ்யாவிற்கான விசாவினை பெற்று இலங்கைக்கு செல்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா : இன்றும் நால்வருக்கு நோய்த் தொற்று உறுதி - இலங்கையின்...
முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத்...
புதிய அமைச்சரவை தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சில தினங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் ஆளுந்...