அனுமான வயதுச்சான்றிதழ் பெறுவது எப்படி!

Saturday, January 14th, 2017

பிறப்பினை பதிவுசெய்ய முடியாத வயது 14ஐ விட குறைந்த பிள்ளைகள் தொடர்பாக அனுமான வயதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கப்படுவது,

  • அரசின் அனுமதிபெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்
  • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள்
  • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்

பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்

  • பிள்ளை காப்பகத்தின் நிர்வாகியின் சத்தியக்கூற்று
  • அரசின் வைத்திய அலுவலர் மூலம் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
  • பிள்ளை சம்பந்தமான விபரத்தினை உள்ளடக்கிய வேறு ஆவணங்கள் (இருந்தால் மட்டும்)

அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்

  1. பாதுகாவலரின் சத்தியக்கூற்று
  2. பிள்ளை பாதுகாவலரின் பாதுகாப்பில் உள்ளார் என உறுதிப்படுத்தக்கூடிய
  • கிராம அலுவலரின் சான்றிதழ் அல்லது
  • சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அலுவலரின் சான்றிதழ் அல்லது
  • சமூக சேவைகள் திணைக்களத்தின் சான்றிதழ் அல்லது
  • பொலிஸ் பரிசோதகரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
  1. அரசின் வைத்திய அதிகாரியினால் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
  2. சுகாதார வளர்ச்சி குறிப்பின் பதிவேடு
  3. பிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலையில் அனுமதித்த பதிவேட்டின் பிரதிUntitled-1 copy

Related posts: