கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – பரிசோதனையை முன்னெடுத்தது நாரா நிறுவனம்!

Thursday, September 3rd, 2020

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள கடற்பகுதிகள் பச்சை நிறமாகி வருகின்றமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி அங்குலான பகுதியை அண்டிய கடல் பகுதியில் பச்சை நிறமாக மாறியுள்ளதாக கடற்றொழில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பச்சை நிறத்திலான திரவம் ஒன்று கடலில் மிதப்பதாக, கடற்றொழில் அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் காரணமாக அந்தப் பகுதியில் பிடித்த மீன்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நாரா நிறுவனம் இது தொடர்பில் பரிசோதனை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் நெவிகியுலா என்ற பெயருடைய டயடம் ஆல்கா வகை ஒன்றே அவ்வாறு கடலில் பரவியுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதென நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அது விஷத்தை ஏற்படுத்தும் ஆல்கா என இதுவரையிலான ஆய்வுகளில் உறுதி செய்யப்படவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றுவரை பல கடல்களில் குறித்த மாற்றம் அவதானிக்க முடிந்துள்ளது. காலி, களுத்துறை, பயாகல, பேருவளை, சிலாபம் மற்றும் மோதர கடல் பிரதேசங்களில் இந்த நிலைமை காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவு; நாரா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: