கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவிடம் இருந்து 4,700 பிசிஆர் கருவிகள் இலங்கைக்கு!

Wednesday, May 26th, 2021

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4 ஆயிரத்து 700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன.

பசுபிக் ஒக்மெண்டேஷன் அணியின் பணிப்பாளர் பிரட் லீடர் மற்றும் சிவில் ராணுவ துணை பிரிவின் பணிப்பாளர் டோனி ஷூ ஆகியோர் இந்த பிசிஆர் கருவிகளை இராஜாங்க அமைச்சர்களான சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோரிடம் வழங்கினார். இதுதொர்பான நிகழ்வு நேற்று  சுகாதார அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: