இலங்கையில் விவசாய திட்டங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனை!

Tuesday, July 3rd, 2018

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விவசாய திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பொருளாதார மற்றும் கொள்கை உருவாக்கும் நிபுணர்களுக்கு உலக வங்கி உந்து சக்தியாக உதவி வழங்க முன்வந்துள்ளது.
இதுதொடர்பான அனுமதியைக் கோரும் மனு இந்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முதலாவது திட்டத்தின் மூலம் திறன்மிக்க நீர்பாவனை, திறன் மிக்க நவீன தொழில்நுட்பம் என்பனவற்றை பிரயோகித்து உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை உயர்த்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் தலைமையின் கீழ் செயல்படும் இந்த திட்டத்திற்கு நீர்பாசன அமைச்சு, மகாவலி அமைச்சுடன் இணைந்து தனியார் மற்றும் சிவில் அமைப்புக்களும் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் உலக வங்கி இதுதொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்கும் என கொழும்பில் உள்ள உலக வங்கியின் சிரேஸ்ட கிராமிய அபிவிருத்தி நிபுணர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார்.

Related posts: