யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் வீதியில் கழிவுகள் கொட்ட வேண்டாம்!
Sunday, January 8th, 2017
யாழ்.மாநகரப் பகுதியில் வீதியோரங்களில் கழிவு பொருட்களை கொட்ட வேண்டாம் என்று மாநகர கழிவகற்றும் பிரிவினர் மக்களை கேட்டுள்ளனர்.
மக்கள் தமது சுற்றாடல்களில் சேர்க்கும் கழிவுப் பொருட்களை தேவையற்ற விதத்தில் வீதியோரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். குறிப்பாக நகரை அண்டிய இராசாவின் தொட்ட வீதி மற்றும் கரையோர பிரதெசங்களில் உள்ள வீதிகள் போன்ற இடங்களில் கழிவுகள் பொதியாக்கி கொட்டப்படுகின்றன.
குடியிருப்பாளர்கள் தமது சுற்றாடல்களில் சேரும் கழிவுகளை வீதியோரங்களில் இவ்வாறு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. கழிவுகளை தரம்பிரித்து பொதியாக்கி வைத்தால் அவை கழிவகற்றும் பிரிவினாரல் அகற்றப்படும். இவ்வாறான நடைமுறைகளை மீறி வீதியோரங்களில் கழிவுகள் கொட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கழிவகற்றும் பிரிவ தெரிவித்துள்ளது.

Related posts:
வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள நூறு பேருக்கு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படவில்லை - அரசாங்க மருத்துவ அதிக...
போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது - போராட்டக்காரர்கள் இதை புரிந்துகொள்ள வேண்ட...
|
|
|


