கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படவில்லை – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, October 19th, 2020

நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா தொற்று உறுதியான 2100 பேரில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்இ

அத்துடன் இலங்கையில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் முதல் அலைகளை விட தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பின் நிலைமை மிகவும் மோசமானது எனவும் அவர் எச்சரித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்ர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளை அறிகுறியற்ற நோயாளிகள், சிறிய அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் என வகைப்படுத்தடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மேற்கண்ட மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டால், அதிகாரிகள் மூன்று நிலை சிகிச்சையை மட்டுமே நிர்வகிக்க வேண்டியிருக்கும் என்றும் வைத்தியசாலை இடவசதிகள் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: