யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி வரலாற்றுச் சாதனை!
Monday, December 26th, 2016
இலங்கை பரீட்சைத் திணைக்கத்தால் நடாத்தப்பட்ட 2014 – 2016 கல்வியாண்டுக்கான தேசிய டிப்ளோமா பரீட்சையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி 100 சதவீத சித்தியைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இப் பரீட்சையில் ஆரம்பக்கல்வியல் 90 அசிரிய மாணவர்களும், விசேட கல்வியல் 14பேரும், தமிழ்மொழி மூல விஞ்ஞானத்தில் 31பேரும், தமிழ் மொழி மூல கணிதத்தில் 13பேரும், ஆங்கில மொழி மூல விஞ்ஞானத்தில் 11 பேரும், ஆங்கிலமொழி மூல கணிதத்தில் 7பேரும், ஆங்கிலத்துறையில் 20பேரும் தோற்றியிருந்தனர். பரீட்சையில் பங்குகொண்ட அனைத்துப் பரீட்சார்த்திகளும் சித்தி எய்தியுள்ளனர். இச்சிறந்த பெறுபெறு கிடைக்க கல்லூரியின் பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கத்தின் அர்ப்பணிப்பே காரணம் என கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் உப பீடாதிபதிகள் விரிவுரையாளர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துன்னொண்டார்.

Related posts:
|
|
|


