நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் ‘சகோதர பாடசாலை’ ஆரம்பம்!

Wednesday, December 7th, 2016

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் மாகாண கல்வி அமைச்சுக்களும் இணைந்து நாடு முழுவதிற்குமான ‘சகோதர பாசல் /சகோதர பாடசாலை’ என்னும் பெயரிலான வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

பல கட்டங்களில் நடைபெறும் இவ்வேலைத்திட்டத் தொடரின் மூலம் மாணவர்களிடையேயும்ஆ சிரியர்களிடையேயும் தேசிய ஒருமைப்பாடு, இலங்கையின் பன்முகத் தன்மை, நல்லிணக்கம் போன்ற காலத்திற்குப் பொருத்தமான விடயங்கள் தொடர்பாக செயன்முறையான அறிவூட்டலோடு மாணவ பரிமாற்ற வேலைத் திட்டம் ஒன்றும் உள்ளடக்கப்படும்.

முதல் கட்டமாக இவ்வருட முதற் பாதியில் வடக்கு, தெற்கு மேல், கிழக்கு, மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் என்போரைக் கொண்ட பயிற்சியாளர்களுக்கான  வேலைத்திட்டத் தொடரொன்று நடைபெற்றதுடன; இரண்டாம் கட்டமாக ‘சகோதர பாசல் / சகோதர பாடசாலை’ என்னும் தலைப்பிலான மாணவர் பாசறையானது கடந்த வாரத்தில் தென் மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களை ஒன்றிணைத்து மட்டக்களப்பிலும், மத்திய மாகாண மாணவர்களுக்கு தம்புல்லயிலும் நடைபெற்றது. வடக்கு மற்றும் மேல் மாகாணம் உள்ளடங்கலாக ஏனைய மாகாணங்களின் மாணவர்களுக்கான ‘சகோதர பாசல்/ சகோதர பாடசாலை’ மாணவர் பாசறைகள் 2017 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘சகோதர பாசல் ஃ சகோதர பாடசாலை’ வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக செயற்படக் கூடிய பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரிய குழாம் ஒன்றுடன் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் குழுவையும் மாவட்ட மட்டத்தில் ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது சமூகங்களுக்கிடையில் நேர்மறையான மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதே ஆகும்.

கல்வித் துறை தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் மத்திய மற்றும் நீண்ட கால திட்டத் தயாரிப்பின்படி ‘சகோதர பாசல் / சகோதர பாடசாலை’ வேலைத்திட்டத்தின் மூலம் மாணவ சமுதாயத்தினர் இலங்கையின் பல்லினத்தன்மை தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு அதன் மூலமாக பரஸ்பர புரிந்துணர்வினைப் பெற்று பல்வேறு மாகாணங்களுக்கிடையிலும் இவ்வாறான தொடர்புகளை கட்டியெழுப்ப முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

3221d0a8d24d9753ce1017a81c583373_XL (1)

Related posts:

யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் உதயம்!
நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினருட...
மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வ...