கொள்ளையிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Saturday, October 8th, 2016

தம்மைக் கட்டிவைத்துத் தாக்கிக் கொள்ளையடித்தவர்களில் 4ஆவது சந்தேக நபரையும் அடையாளம் காட்டினர் வயோதிபத் தம்பதி.

வரணி இயற்றாலையில் உள்ள குறித்த வயோதிபத் தம்பதிகளின் வீட்டுக்கு காரில் வந்த சில நபர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஆள்கள் அனுப்புவர்கள் போன்று விசாரித்தனர். தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, தம்பதியை தாக்கி கட்டி வைத்து விட்டு வீட்டில் இருந்த நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கார்ச் சாரதி ஒருவர் திருட்டுடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் ஒருவர், நகைகளைக் கொள்வனவு செய்த வியாபாரி ஆகியோரை கைது செய்து பொலிஸார் நீதிமன்றில் ஏற்கனவே முற்படுத்தியிருந்தனர். அவர்களை வியக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் வியாபாரி தவிர்ந்த ஏனையோரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். அதன் பின்னர் அந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் அடையாள அணிவகுப்பிலும் இணைக்குமாறும் உத்தரவிட்டார். குறித்த மூவரும் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்ட போது பணம், நகைகளை பறிகொடுத்த 73 வயதுத் தம்பதி, அந்தப் பகுதியிலுள்ள வர்த்தகர் ஆகியோர் சாட்சிகளாக கலந்துகொண்டு மூவரையும் அடையாளம் காட்டினார். மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது 4ஆவது சந்தேக நபர் சட்டத்தரணி   மூலம் நீதிமன்றில் சரணடைந்தார். அவைர விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் நேற்று அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யுமாறும் பணித்தார். நேற்று பதில் நீதிவான் முன்னிலையில் 4ஆவது சந்தேக நபர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டார். அவரைக் குறித்த வயோதிபத் தம்பதியர் அடையாளம் காட்டினர். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த நால்வரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

fghjkl5656

Related posts: