பத்து புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு!

Sunday, November 5th, 2023

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள  10 பேர் இன்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ், கம்போடியா, போர்த்துக்கல் குடியரசு, சிரினாம் குடியரசு, ஜிபூட்டி குடியரசு, அங்கோலா குடியரசு, பின்லாந்து குடியரசு, பொலிவேரியன் குடியரசு, வெனிசுலா மற்றும் நோர்வே குடியரசு ஆகிய நாடுகளுக்காக இவ்வாறு  புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில்

ஜூரிஸ்  பொன் –   லெட்வியா குடியரசு தூதுராகவும்

லியோ டிட்டோ அவுசன் –  பிலிபைன்ஸ் குடியரசு தூதுராகவும்

கே குவாங் – கம்போடியா இராச்சிய தூதுராகவும்

ஜோவா மெனுவல் மென்தெஸ் டி அல்மெய்தா- போர்த்துக்கல் குடியரசு தூதுராகவும்

அருண்குமர் ஹர்டியன் –   சிரினாம் குடியரசு தூதுராகவும்

இஸ்ஸே அத்துல்லாகி அசோவே  – ஜிபூட்டி குடியரசு தூதுராகவும்

கிளெமென்டே பெட்ரோ கெமென்ஹா –   அங்கோலா குடியரசு தூதுராகவும்

கிம்மோ லஹ்டெவிர்தா –   பின்லாந்து குடியரசு தூதுராகவும்

கபயா ரோட்ரிகுவே கொன்சலேஸ் –  வெனிசூலா பொலிவேரியன் குடியரசு  தூதுராகவும்

மே-எலின் ஸ்டெனர் – நோர்வே இராச்சியத்தின் தூதுராகவும் தமது சான்றுகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்

இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பிரவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: