கோத்தா குறித்து மஹிந்த கருத்து.!

Thursday, November 23rd, 2017

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்வதற்கு தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பழி வாங்கும் எல்லையை கடந்து இந்த அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் பழிவாங்கும் இலக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்பத்தினராகும். தற்போது கோத்தபாயவை குறிவைத்து அரசு ஓடுகிறது. அதற்கு பின்னர் நெருக்கமான உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பின்னால் செல்கிறது.. இதுவரையில் முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் சிறைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலைமையில் அரசாங்க அதிகாரிகள் ஏதாவது ஒன்றை செயற்படுத்தும் போது இரண்டு முறை சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Related posts: