மத்தியகிழக்கு நாடுகளுக்கு வயது குறைந்தோரை அனுப்பும் கும்பல் கைது!

Thursday, March 24th, 2016
வயது குறைந்தவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பல் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.ஒரு வர்த்தக நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள இந்த நடவடிக்கைகளை கட்டப்படுத்தும் முகமாக  அதுதொடர்பான தகவல்களை வெளியிட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முன்வந்துள்ளது.
இதன்படி 17,18,19 வயதுகளையுடையோருக்கு போலி கடவுச்சீட்டுக்களைத் தயாரித்து அவர்களை மத்தள விமான நிலையம் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மூவரை நேற்றைய (23) தினம் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொழும்பு மருதானை பிரதேசத்தில் வைத்து குறித்த மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளைஇ கைது செய்யப்பட்ட நபர்கள் அபுதாபிஇ சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வயது குறைந்தோரை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் இதற்கு மத்தள விமான நிலையத்தின் அதிகாரிகள் சிலரது ஒத்துழைப்பு கிடைத்ததாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: