ஆனைக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையானது!
Thursday, September 21st, 2023
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.40 அளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் பேருந்து உரிமையாளரின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
பேருந்து தீக்கிரையானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெண்களின் சதவீதம் குறைக்கப்பட வேண்டும்!
காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையின் இயந்திரம் பழுதடைந்தது!
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு - மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன...
|
|
|


