வடக்கில் 26 சிறுவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுறுதி – சுகாதார பகுதியினர் கடும் எச்சரிக்கை!

Thursday, August 5th, 2021

வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் நிலைமை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று 26 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பகுதியினர் குறிப்பிட்டுள்ளனர்..

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று வடக்கில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், 2 வயது குழந்தை முதல் 22 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேபோல யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் 4 சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அளவெட்டி பிரதேச மருத்துவமனையில் 6 வயது இரட்டைச் சிறுமிகள் மற்றும் 6, 8, 13 வயது சிறுமிகள், 14 வயது சிறுவன் என 6 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3, 14 வயது சிறுவர்கள் இருவர், 5, 11 வயது சிறுமிகள் இருவர் என நான்கு சிறுவர்கள் தொற்றாளராக இனங்காணப்பட்டனர்.

அத்துடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 வயது பெண் குழந்தையும், யாழ். போதனா வைத்திய சாலையில் 14 வயது சிறுவனும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 02, 06, 07, 10, 10, 12, 11, 14, 18 வயது சிறுவர்களும், 6, 12, 18 வயது சிறுமிகளும் அடங்கலாக 12 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

தவிர, மன்னார் பொது மருத்துவமனையில் 10 வயது சிறுவனும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 15 வயது சிறுவனும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: