பொலித்தீன் பாவனையைத் தவிருங்கள் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Thursday, May 25th, 2017

பாடசாலைகளில் பொலித்தீன் பாவனையை தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை பின்வருமாரு,

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு விசேட அறிவுறுத்தல் கோவை ஒன்று விநியோகிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு தொடர்பில் பெற்றோர்களும் மாணவர்களும் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் பாடசாலை மாணவர்களில் பெரும்பாலானோர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது – என்றுள்ளது.

Related posts: