யாழில் கதலி வாழைப்பழ விலையில் உயர்வு
Thursday, March 23rd, 2017
யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழத்தின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில் கடந்த இரு நாட்களாக ஒரு கிலோ வாழைப்பழம் நூறு ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
யாழில் பல்வேறு ஆலயங்களிலும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ளமையும், பங்குனித் திங்கள் போன்ற இந்துக்களின் புனித விரத தினங்கள் ஆரம்பமாகியுள்ளமையுமே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் - சுகாதா...
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தீவிரமாக செயல்படுவேன் - மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவி...
பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர...
|
|
|


