தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தீவிரமாக செயல்படுவேன் – மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Friday, March 24th, 2023

பரிந்துரைகளுக்கு மட்டுப்படுத்தாமல் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிடப்போவதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மேற்பார்வைக் குழுவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த நாட்டில் மத தீவிரவாதம் செயற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மதம் மற்றும் மொழியை மட்டும் போதிக்கும் பதிவு செய்யப்படாத மத்ரஸா பாடசாலைகள் குறித்தும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தீவிரவாத கருத்துக்கள் மற்றும் விரிவுரைகளை வழங்குபவர்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீவிரவாதத்தை தோற்கடிப்பது தொடர்பாக மிக முக்கியமான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 2015 முதல் 2019 ஆம் ஆண்டுவரை செயற்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களுக்கு பாதுகாப்பு மட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டிருந்தால் அவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்றும் குறித்த குழு வலியுறுத்தியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: