மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு …..!

Sunday, March 5th, 2017

தற்போது குறித்த விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன் முதல்கட்டமாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விடையங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த வாரமளவில் இதனை வெளியிட்டார்.

இந்த அறிவித்தலில் முகத்தினை முழுமையாக மூடி தலைக்கவசத்தினை அணிவது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மோட்டார் சைக்கிள் பங்குதாரர் சங்கத்தின் செயலாளர் அமரசிங்க முழுமையாக மூடும் தலைக்கவசத்தினை தடை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் அதிகாரிகளுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டால் தங்களிடம் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தும் பல இடங்களில் போக்குவரத்து பொலிஸார் இடைமறித்து இந்த தலைக்கவசத்தினை அணியக்கூடாது என தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அணிவதால் சமூக விரோத செயல்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் போன்றன இடம்பெறுவதாக பொலிஸார் கடந்த காலங்களில் தெரிவித்துவந்தனர்.

இதனை கவனத்தில் கொண்டே முகத்தை மூடும் தலைக்கவசம் அணியக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வர்த்தமானியில் இது குறித்த தெரிவிக்கப்படாத நிலையில் மக்கள் பெரும் அசௌகரியத்தில் உள்ளனர்.

வர்த்தமானியில் குறிப்பிடாத காரணத்தால் முகத்தை மூடும் தலைக்கவசத்தை அணிந்து செல்லும் போது போக்குவரத்து பொலிஸார் இடை மறித்து இதை அணியக்கூடாத என தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தாங்கள் அரசாங்கத்தின் பேச்சினை கேட்பதா ? போக்குவரத்து பொலிஸாரின் கட்டளைகளை மதிப்பதா? அல்லது மோட்டார் சைக்கிள் பங்குதாரர் சங்கத்தின் உதவியை நடுவதா? என்ன செய்வதறியாமல் நிக்கின்றனர்.

இவ்வாறு இருக்க தற்போது மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது பாதுகாப்பான தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை உந்துருளியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் இலங்கையில் இருசக்கர மோட்டார் வண்டி சாரதிகள் முகத்தினை மூடியவாறு தலைக்கவசம் அணியக்கூடாது என்பதே அரச தரப்பினரின் கருத்தாக தற்போது உள்ளது.

Related posts: