தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக தெரிவுசெய்யப்பட்ட பாடாசாலைகளுக்கு நூல்கள் வழங்கிவைப்பு!

Wednesday, April 25th, 2018

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடாசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டுள்ளது

யு.எஸ்.ஏ.ய்.ட் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரiணியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடாசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டுள்ளது

வடமாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் இன்று காலை யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு இந்நூல்களை வழங்கி வைத்தனர்

இதன்படி வடமாகாணத்திலுள்ள எழுபது70 பாடசாலைகள் மற்றும் நாற்பத்தைந்து45 சமூக நூலகங்களுக்கு சகல துறைகளையும் உள்ளடக்கிய நூல் தொகுதி வழங்கப்பட்டது

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சுஜன் நாணயக்கார வடமாகாண ஆளுனர் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் லயன்ஸ்கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

கடந்த 2015ல் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக தேசிய அரசாங்கம் எதிர்வரும் 2020ம் ஆண்டுவரை ஒற்றுமையாக பயணிக்கும் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இங்கு உரையாற்றுiகில் குறிப்பிட்டார் –

Related posts: