வீதி விபத்துகள் – போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!
Monday, May 17th, 2021
இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான கைப்பேசி செயலியொன்றை (Mobile App) பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில், அவ்வமைச்சில் இன்று இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ‘ஈ – ட்ரெஃபிக் பொலிஸ் ஸ்ரீலங்கா’ (e-Traffic Police Sri Lanka) என்ற இந்த செயலியின் ஊடாக, பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இன்றி, போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வீதி விபத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
பலாலி விமான நிலையத்திற்கான வீதி புனரமைப்பு துரிதகதியில் !
மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் 30 நாள் கூடுதல் அவகாசம் - மின்சக்தி அமைச்ச...
வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக சென்ற 700 வைத்தியர்கள் இலங்கை திரும்புகின்றனர் - சுகாதார அமைச்சின் செய...
|
|
|


