மொழிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இளைஞர்களின் கல்வி வளர்ச்சி அவசியம் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்து!
Tuesday, March 21st, 2023
மலையகத்தில் மொழிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அங்குள்ள இளைஞர், யுவதிகளின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழின்முயற்சிகளில் தங்களின் கூடுதல் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் தங்களின் கல்வியறிவை வளர்த்துக் கொண்டதன்ஊடாக அங்குள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் அதிகளவில் பணியில் ஈடுபடக் கூடிய தன்மையை காண முடிகின்றது.
அதை விடுத்து வெறுமனே பெயர் பலகைகளில் தமிழின் பங்களிப்பை எதிர்பார்ப்பது போதுமானதாக இருக்காது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர மலையகத்தில் பல்கலைக்கழகமொன்றை அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்க மட்டத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், விரைவில் அதற்கான அடித்தள கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


