அனுமதியின்றி மரம் வெட்டிய மரக்கூட்டுத் தாபனத்திற்கு எதிராக முறைப்பாடு!

Saturday, October 1st, 2016

தெல்லிப்பளையில் தனியார் காணிக்குள் இருந்த மரத்தினை எந்தவிதமான அறிவித்தல்களும் கொடுக்கப்படாமல் தன்னிச்சையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது என்று மரக் கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, தெல்லிப்பளை – வித்திகபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மிக நீண்ட காலமாக புளிய மரம் ஒன்று இருந்து வந்துள்ளது.

அப்புளியமரத்தினை அண்மித்தாக அப்பகுதியினரின் போக்குவரத்திற்கான கையொழுங்கை ஒன்றும் உள்ளது.இந்நிலையில் அந்த ஒழுங்கையினை பயன்படுத்தும் ஒருவர் குறித்த காணிக்குள் உள்ள புளிய மரம் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்து அதனை வெட்டி அகற்றுமாறு அப்பகுதி கிராம சேவகரிடம் கேட்டுள்ளார்.

இருப்பினம் அம்மரம் வெட்டப்படாததை அடுத்து இது தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தினை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் யாழ். அரசாங்க அதிபர் இது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு மரக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணி உரிமையாளர்கள் இல்லாத சமயத்தில் அப்பகுதி கிராம சேவகருக்கு கூட எந்த விதமான அறிவித்தல்களும் கொடுக்காமல், தன்னிச்சையாக அங்கு வந்து அம்மரத்தினை வெட்டியுள்ளனர்.

உரிய இடங்களிலும், காணி உரிமையாளரிடமும் அனுமதி பெற்றுத்தான் அம்மரம் வெட்டப்படுகின்றது என்றும் மரக்கூட்டுத்தாபனத்தினர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தள்ளனர்.

இதன் பின்னர் தனது காணிக்குள் வந்த உரிமையாளர் மரம் வெட்டப்பட்டு இருப்பதை அடுத்து அப்பகுதி கிராம சேவகரிடம் சென்று கேட்ட போது அவர் அது தொடர்பில் எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தனது வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மரக்கூட்டுத்தாபனத்தினர் மரங்களை வெட்டிச் சென்றதாக கூறி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

complaint-1

Related posts: