மேலும் 800 ஏக்கர் காணிகளை வலி.வடக்கிலிருந்த விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்!

Sunday, August 21st, 2016

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 800 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட பகுதிகளில் 460 எக்கர் காணிகள் மட்டுமே மக்கள் மீள்குடியேறிக் கொள்ளக் கூடிய குடியிருப்புக் காணிகள் என்றும், ஏனையவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் அதனை அண்மித்த பகுதிகள் மற்றும் படைமுகாங்கள் அமைந்துள்ள பகுதிகளே என்றும் யாழ்.மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக காங்கேசன்துறை கிழக்கு J/233, காங்கேசன்துறi மத்தி J/234, காங்கேசன்துறை மேற்கு J/235, பளை வீமன்காமம் J/236, தையிட்டி J/250 போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள காணிகளே இதன் போது விடுவிப்பதற்காக இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்தினால் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடுவிப்பதாற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் காணிகள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்காலை மற்றும் அதற்குரிய காணிகளாக உள்ளன. மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரினதும், கடற்படையினருடையதும் பாரிய படைமுகாங்களும் ஏராளமான மக்களுயைட குடிமனைக் காணிகளை ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் குறித்த மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்றுவரும் முதற்கட்ட ஆராய்வுகளின்படி விடுவிக்கப்படும் 800 ஏக்கரில் சுமார் 460 ஏக்கர் காணியே மக்களுடைய மீள்குடியேற்றத்திற்குப் பயன்படுத்தப்படக் கூடிய குடிமனைக் காணிகளாகும்.

Related posts: