சுதுமலையில் நேற்றிரவு வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்!

Monday, June 26th, 2017

மானிப்பாய் – சுதுமலை மேற்கு அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றுக்கு கூரிய ஆயுதங்கள் சகிதம் சென்ற கும்பல் ன்ற அங்கிருந்தவர்களை அச்சுறுத்திய பின்னர் அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளது.. இதனால் இப்பகுதியில் நேற்று அச்சமான சூழல் நிலவியது.

சம்பம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர் நேற்றிரவு 9 மணியளவில் மேற்படி வீட்டுக்குச் சென்றனர். முகங்களைக் கறுப்புத் துணியால் கட்டியிருந்த அவர்கள் கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களையும் கொட்டன்களையும் வைத்திருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் வெளியே வரவில்லை. கேற்றை வெட்டித் திறந்து உள்ளே சென்ற மேற்படி காடையர் குழுவைக் கண்டதும் அவர்கள் வீட்டினுள் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டனர்.

அவர்களை வெளியே வருமாறு அச்சுறுத்திய மேற்படிக் குழுவினர் வீட்டுக் கதவுகளைக் கொத்தியதுடன் வெளியே இருந்த பல பொருட்களையும் சேதப்படுத்தினர். அச்சமடைந்த பெண்கள் அழுது குளறிக் கூக்குரல் இட்டனர். அதைக் கேட்டு அயலில் உள்ளவர்கள் அங்கு ஒன்றுகூடினர். இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய மேற்படிக் கும்பல் மோட்டார் சைக்கிள்களில் ஏறித் தப்பிச் சென்றது. இச் சம்பவத்தால் அப்பகுதியில் நேற்றிரவு அச்சமான சூழல் நிலவியது.

யாழ்.குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம் ஓரளவு ஓய்திருந்த நிலையில் நேற்றிரவு மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: