டெங்கு தொற்றால் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் உயிரிழப்பு – 48,963 பேருக்கு தொற்று உறுதி!

Saturday, July 1st, 2023

டெங்கு தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு இதுவரையில் 48,963 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

இவர்களில் 24,402 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிக ஆபத்துள்ள வலயங்களாக 61 பிரதேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நல்லூர் ஆலயச் சுற்றாடலில் வீடுகளில்  நாய்களை வளர்ப்போர் கட்டிப் பராமரிக்குமாறு அறிவுரை!
ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை - இராஜாங்க அமைச்சர் ச...
இந்தியா, இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் இலங்கைக்கான இந்திய உய...