நவம்பர் மாதத்தில் 39 மனித கொலைகள்- பொலிஸ் தலைமையகம் தகவல்!

Thursday, December 15th, 2016
இந்த ஆண்டின் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவான பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை 7592 என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தக் குற்றச் செயல்கள் கடந்த ஆண்டுக்கு நிகராக எவ்வாறான மாற்றத்தை காட்டுகின்றது என்பது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பில் அத தெரண செய்திப்பிரிவு வினவிய போது, கடந்த ஆண்டின் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான தரவுகள் தம்மிடம் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.  பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மாத்திரம் பாரிய குற்றச்செயல்கள் 575 ஆக பதிவாகியுள்ளன.

அவற்றில் மனிதப்படுகொலை சம்பவங்கள் 39, பாலியல் குற்றங்கள் 198, வீடுகளை உடைத்தல் 153, கொள்ளை சம்பவங்கள் 64 மற்றும் திருட்டுச் சம்பவங்கள் 121 பதிவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை கடந்த ஆண்டு நவம்பர் மாத்துடன் ஒப்பிடும் போது 90 குற்றச் செயல்கள் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான பாரிய குற்றச் செயல்களில் அதிகளவானவை மேல் மாகாணத்தில் பதிவாகியிருந்ததுடன், அவற்றின் எண்ணிக்கை 170 ஆக உள்ளதென்று அந்த அறிக்கை கூறுகின்றது.

அந்த அறிக்கையின்படி மேல் மாகாணத்தில் நுகேகொட தொகுதியிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.  எவ்வாறாயினும் ஆண்டின் ஏனைய மாதங்களில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், அவை தொடர்பான தரவுகள் தம்மிடம் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

Sl_police_flag

Related posts: