மேசன்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க துரித நடவடிக்கை!

Saturday, October 15th, 2016

கட்டடக் கட்டுமாணப் பணியில் மேசன் தொழிராளர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டையும் பற்றாக் குறையையும் நீக்கும் வகையில் யாழ்.மாவட்டத்தசை; சேர்ந்த 245 இளைஞர்களுக்கு மேசன் தொழில் பயிற்சி வழங்கப்படுகின்றது. இவர்களுக்கான 3 மாத பயிற்சிக்காலத்தில் மாதம் ஒன்றுக்கு 10 அயிரம் ரூபா வீதம் ஊக்குவிப்பு கொடுப்பனவும் பயிற்சி நிறைவடைந்த பின்னர் 8 ஆயிரம் பெறுமதியான உபகரணத் தொகுதியும் சீருடையும் வழங்கப்படும். பயிற்சியில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் பிரதேச செயலக பிரிவுகளில் கடமையிலுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம் என யாழ்.மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முகாமையாளர் எம்.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.

மேசன் பயிற்சி தொடர்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முகாமையாளர் தெரிவிக்கையில்:

யாழ்.மாவட்டத்தில் கட்டட நிர்மாணப் பணிக்கான மேசன் தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனைப் போக்குவதற்கு மேசன் தொழில் பயிற்சி பெற்றவர்களை உருவாக்கி சிறப்பான முறையில் கட்டுமாணப்பணியை மேற்கொளவதற்கு வசதியாகவும் பாடசலையை விட்டு விலகிய இளைஞர்களுக்கு மேசன் தொழிற்பயிற்சியை வழங்குகின்றோம். மேசன் தொழில் பயிற்சியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் நைற்றா மற்றும் இன்ரரட் நிறுவனங்களும் இணைந்து வழங்குகின்றன. இந்த பயிற்சி நெறியில் தற்போழுது 245 இளைஞர்கள் இணைந்து பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சி நெறியில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் உட்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இவர்களுக்கு தற்பொழுது வேலை செய்யும் வேலைத்தளங்களில் எமது போதனாசிரியர்கள் பயிற்சி வழங்குவர். 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் ரூபா 10 ஆயிரம் மாதம் ஒன்றுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாகவும் பயிற்சி நிறைவில் 8 ஆயிரம் பெறுமதியான உபகரணத் தொகுதியும் சீருடையும் வழங்கப்படும். அத்துடன் பயிற்சி பெற்றமை தொடர்பான சான்றிதழும் வழங்கப்படும். மேசன் பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற விரும்பவர்கள் பிரதேச செயலகங்களில் கடமையிலுள்ள தேசிய வீடமைப்;பு அபிவிருத்தி அதிகார சபை அலுவலர்களிடம் பதிவுகளை மேற்கொள்ளலாம். – என்றார்.

mesannn-680x365

Related posts: