மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும்- பிரதமர்!

Sunday, September 18th, 2016

 

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க சில நேரம் மேலும் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து மல்வத்து மாநாயக்க தேரருடன் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். உத்தேச புதிய அரசியலமப்புச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மாத்திரமல்லாது பிரதேச சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும். பௌத்த மத்திற்குரிய இடத்தை இல்லாமல் செய்வோம், தேசிய கொடியை மாற்றுவோம், தேசிய கீதத்தை மாற்றுவோம் என சிலர் கூறுகின்றனர்.

இப்படியான முட்டாள்களான இனவாதிகளுடன் எதனை செய்ய முடியும் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ranil-pm-400-seithy2

Related posts: