அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விசேட நீதிமன்றம் – ஜனாதிபதியின் அனுமதிக்கு விரைவில் கையளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதில் வரி அறவீடு தொடர்பிலான நடைமுறைப் பிரச்சினைகளை நிவர்த்தித்தல் தொடர்பிலான விசேட பரிந்துரைகளை உள்ளடங்கியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார அடிப்படையில் பார்க்கையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது முக்கிய விடயமாகும் என்றும் வருமான அதிகரிப்பின் போது வரி அறவீடுகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும் எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதும் வரி செலுத்தாமல் இருக்கின்ற மதுபான வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு 14 தினங்களுக்கு வரிப் பணத்தை செலுத்து முடிக்குமாறு விசேட கட்டளை ஒன்று விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதும் நாட்டில் சுயமாக வரிச் செலுத்தும் முறைமை ஒன்றே காணப்படுவதாகவும் அதனை மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: