முற்றாகவே மலேரியா ஒழிக்கப்பட்டாலும்  அது மீளவரும் ஆபத்து இன்னும் உள்ளதாம்!

Saturday, October 28th, 2017

இலங்கையிலிருந்து மலேரியாக் கிருமிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டன. மலேரியா இல்லாத இலங்கை என்ற சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் அளித்துள்ளது. எனினும் இலங்கையில் மீண்டும் மலேரியா தலையெடுக்கும் ஆபத்து உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

இலங்கையில் மலேரியாக் கிருமிகள் இல்லை என்றாலும்  மலேரியாக் கிருமிகளைக் காவி பரப்பக் கூடிய நுளம்புகள் முதலில் மன்னாரிலும் இப்போது யாழ்.குடாநாடு உட்பட பல இடங்களிலும் காணப்பட்டுள்ளன.

எங்கேயாவது மலேரியாக் கிருமிகள் இந்த நுளம்புகளுடன் தொடர்புபடுமாயின் மீண்டும் மலேரியா பரவும் ஆபத்து ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

மலேரியா இல்லாத இலங்கை என்றாலும் இந்தியா மற்றும் ஆபிரிக்காக் கண்டங்களில் இருந்து இலங்கைக்கு வந்த பயணிகள் சிலரில் மலேரியா நோய் அவதானிக்கப்பட்டமையை அடுத்து அவர்கள் உரிய கண்காணிப்பின் கீழ் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டனர் என்றும் அதன் மூலம் மலேரியா பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது..

Related posts: