இலஞ்ச ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதியின்வேண்டுகோள்!

Thursday, February 15th, 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலஞ்சம் ஊழல் மோசடி என்பனவற்றிற்கான விரிவான வேலைத்திட்டத்திற்கு மக்களின் உதவியை வேண்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் சுபீட்சமான யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்காக ஊழல் மோசடிகளுக்கு எதிரான சமூகக் கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் ஊடக இணைப்பு செயலாளர் ரஜித்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நிர்வாகக் கட்டமைப்பை வலுவூட்டுவதும் நீதி வழங்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவது அவசியமாகும். தூய்மையான நாட்டை கட்டியெழுப்புவது ஜனாதிபதியின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் எனவும் முகவரி ஊழலுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி செயலகம் கொழும்பு 01 என்பதாகும். தொலைபேசி இலக்கம் 0112 431 502 என்பதாகும்.  zerocorruption@presidentsoffice.lk  என்ற மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 076 4654600 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு அல்லது 077 5770882 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஏ.என்ஆர். அமரதுங்கவை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts: