நாட்டில் கொரோனா அபாயம் குறையவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி எச்சரிக்கை!
Thursday, October 28th, 2021
நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையும் அபாயம் உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், டெல்டா பிளஸ் பிறழ்வால் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையும் அத்தகைய ஆபத்திலேயே உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து - ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ...
பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு!
அனைவரும் புத்தாண்டை மிகுந்த அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு...
|
|
|


