பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

Thursday, October 13th, 2016

வழக்கு ஒன்று தொடர்பிலான அழைப்பாணை ஒன்றை ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அதிகாரியொருவர் சபரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்த போது, துணை வேந்தர் அழைப்பாணை ஏற்றுக்கொள்ளாது அதிகாரியை திருப்பி அனுப்பியுள்ளமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலாங்கொட நீதவான் மற்றும் மாவட்ட நீதவானாக கடயைமாற்றி வரும் துமிந்த சீ.முதுன்கொட்டுவவினால் நேற்று, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சந்தன உடவத்தவிற்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது – அண்மையில் வழக்கு ஒன்று தொடர்பிலான அழைப்பாணை ஒன்றை ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அதிகாரியொருவர் சபரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்த போது, துணை வேந்தர் அழைப்பாணை ஏற்றுக்கொள்ளாது அதிகாரியை திருப்பி அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அதிகாரியை திருப்பி அனுப்பி வைப்பது நீதிமன்றை அவமரியாதை செய்வதாகும் என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.சப்ரகமு பல்கலைக்கழகம் என அழைப்பாணையில் குறிப்பிடப்பட்ட காரணத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள துணைவேந்தர் மறுத்த போதிலும் சப்ரகமு மற்றும் சப்ரகமுவ ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பதாக நீதவான் தெளிவுபடுத்தியுள்ளார்.

சப்ரகமு மஹா சமன் தேவாலயத்தின் பெயரில் சப்ரகமுவ என எழுதப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.உயர் பதவியை வகிக்கும் துணைவேந்தர் போன்றவர்கள் இவ்வாறு செயற்படுவது உசிதமானதல்ல என நீதவான் தெரிவித்துள்ளார்.

law

Related posts: