முதியோர் இல்லத்தில் ஒரே நாளில் மூவர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்!
Thursday, December 22nd, 2016
கைதடி அரச முதியோர் இல்லத்தில் ஒரே கிராமத்தைந் சேர்ந்த 3 முதியவர்கள் ஒரே நாளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
வடமாராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தைச் சேர்ந்த ஆழ்வாப்பிள்ளை ஜெயரூபன், ஜெயரூபன் சறோஜினி மற்றும் கந்தையா பொன்னம்மா ஆகியோரே இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மூவரும் ஒரே குடிசையில் வசித்து வந்தனர். அண்மையில் ஏற்பட்ட நாடாபுயலில் இவர்களின் குடிசை இடிந்து விழுந்து மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளான நிலையில் மருதங்கேணி சமூக சேவை உத்தியோகத்தர் சி.கணேசராஸா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவர்களின் பரிதாப நிலையைக் கண்டு இவர்களை முதியோhர் இல்லத்துடன் தொடர்பு கொண்டு அங்கு அவர்களை சேர்த்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - புங்குடுதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவி...
பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜன...
கோழி இறைச்சி, மீன், முட்டை விலைகள் சடுதியாக உயர்வு – நுகர்வோர் கவலை!
|
|
|


