பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!
Friday, July 1st, 2022
பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளை வலுப்படுத்திச் செல்வதற்காக ஆதரவு வழங்கப்படும் என ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை முகங்கொடுத்துள்ள தற்போதைய நெருக்கடி நிலைமையை நன்கு புரிந்துள்ளதாகவும், விரைவாக நாடு வழமைக்கு திரும்பும் என தாம் நம்பிக்கை கொள்வதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எச்சரிக்கை: அதிகரிக்கிறது வெப்பம்!
போலி ஆவணங்களை தயாரித்து வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரால் கைது!
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு!
|
|
|


