மினி பஸ்ஸில் கைப்பையை வெட்டி பணப்பை திருட்டு!!
Thursday, December 1st, 2016
மினிபஸ்ஸில் நின்ற நிலையில் பயணஞ்செய்து கொண்டிருந்த வயோதிபப்பெண் ஒருவர் மணிபேர்ஸை திருடனிடம் பறிகொடுத்துள்ளார். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த கைப்பையை பிளேட்டினால் தந்திரமாக வெட்டிய திருடன், அற்குளிருந்த அடையாள அட்டை, வங்கிப்புத்தகங்கள், பணம் ஆகியவை அடங்கிய மகிபேர்ஸை எடுத்துச் சென்றுள்ளான்.
இத்துணிகரமான திருட்டு நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து மாதகல் சென்றுகொண்டிருந்த மினிபஸ்ஸில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாயைச் சேர்ந்த வயோதிபப்பெண்ணே பாதிக்கப்பட்டவர் ஆவார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து மாதகல் நோக்கி செல்லும்போதே சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டக்குச் சென்ற பின்னரே அவருக்குப் பொருள்களைப் பறிகொடுத்தது தெரியவந்துள்ளது

Related posts:
ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!
மத்தியஸ்த சபை முறைமைக்கு 25 வருடங்கள்!
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தலைமையகம் நிர...
|
|
|


