மத்தியஸ்த சபை முறைமைக்கு 25 வருடங்கள்!

Wednesday, November 9th, 2016

மத்தியஸ்த சபை முறைமை ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதன் வெள்ளி விழா ஏற்பாடுகள் அலரி மாளிகையில் நாளை இடம்பெறவுள்ளது.

முதலாவது மத்தியஸ்த சபை 1991ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி மொரட்டுவையில் அமைக்கப்பட்டது.கடந்த 25 ஆண்டுகளில் நாடு முழுவதும் 329 மத்தியஸ்த சபைகள் ஏற்படுத்தப்பட்டன. எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் மத்தியஸ்த அதிகாரிகளாக சேவையாற்றுகினறனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஐந்து மத்தியஸ்த சபைகள் செயற்படுகின்றன. யாழ், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இவை இயங்குகின்றன. நீதிமன்றங்களை நாடாமல், சிறிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் நீதி அமைச்சு மத்தியஸ்த சபைகளை ஆரம்பித்தது.

அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பான நெருக்கடிகள், ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகள், ஐந்து லட்சம் ரூபாவை விட பெறுமதி குறைந்த வழக்குகள் அல்லது கடன்கள் தொடர்பான விடயங்கள் மத்தியஸ்த சபைகளின் மூலம் தீர்க்கப்படுகின்றன.

வருடாந்தம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் மத்தியஸ்த சபைகளுக்குக் கிடைக்கின்றன. இதில் 50 சதவீதமாவைக்கு மத்தியஸ்த சபைகளின் மூலம் தீர்வுகள் வழங்கப்படுவதாகவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

a2075ac6cd9f6e7e74eccf6886a8895a_XL

Related posts: